
நாட்டில் புகழ்பெற்ற குட்வில் கால்பந்து கிளப் ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு
பெட்டாலிங் ஜெயா ஜாலான் டெம்பளரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு குட்வில் கால்பந்து கிளப் சார்பில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

குட்வில் கால்பந்து சங்கத்தின் தலைவர் புவியரசன், சோமசுந்தரம், கலை உட்பட அனைத்து காட்பந்து விளையாட்டாளர்தளின் ஆதரவோடு இந்த இல்லத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மிக விரைவில் தீபாவளியை கொண்டாடும் வகையில் இந்த இல்லத்தில் தங்கி இருப்பவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக புவியரசன் தெரிவித்தார்.
புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பஹாகியா டாக்டர் மனோ பரமசிவம் மற்றும் ஷா ஆலம் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி இராஜன் தலைமையில் இந்த ஆதரவற்ற இல்லத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.