
புனித ரமலான் மாதம் முஸ்லிம் மக்களால் வரவேற்கப்படவுள்ள நிலையில் பகாங் மாநில அரசு ஊழியர்கள் ரமலான் மாதத்தில் உள்ள வெள்ளிக்கிழமைகளில் 12.30 யுடன் தனது பணியை முடித்து கொள்வார்கள்
ரமலான் மாதத்தை அவர்களின் குடும்பத்தாருடன் கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கைக்கு தாம் இணக்கம் தெரிவித்ததாக பகாங் மாநில ஆட்சியாளர் அல் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா கூறினார்,
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மாநில உச்சமன்ற கூட்டம் நடைபெற்ற போது இந்த முடிவு எட்டப்பட்டதாக அல் சுல்தான் அப்துல்லா வெளியிட்ட முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பகாங் மாநில அரசு ஊழியர்களின் வசதிக்காகவும் அவர்கள் தங்களின் ரமலான் முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் இது வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

