மக்கள் மனதை தொடும் கவிதைகள் மட்டுமேபுதிய தலைமுறையை கவரும் – டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், பிப்.15-
தமிழும் இலக்கியமும் நம் நாட்டில் நீடித்திருக்க தமிழ்ப் படைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

அதற்கான ஆதரவையும் நாம் முழுமையாக வழங்க வேண்டுமென மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக் கொண்டார்.

கவிதைகள் எழுதி காதல் செய்த கடைசி தலைமுறை நாம் தான். மயில் இறகை புத்தகத்தின் நடுவில் வைத்து அது குட்டிப்போடும் என்று காத்திருத்த தலைமுறையும் நாம் தான் என்றார்.

இந்த அனுபங்கள் அனைத்தும் என்றும் நம் மனதிலிருந்து மறையாது. இன்றைய சூழ்நிலை அப்படி அல்ல என்றார்.

நாம் படைக்கும் கவிதைகள் வாசிப்பவர்களின் மனதை தொட வேண்டும். அப்படிப்பட்ட கவிதைகள் அடுத்த தலைமுறையினரால் பேசப்படும் என இன்று மஇகா நேதாஜி மண்டப்பத்தில் நடைப்பெற்ற கவிஞர் சிவா, சுங்கைப்பட்டாணி அவர்களின் காற்று வெளியிடை கண்ணம்மா கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பரையாற்றிய அவர் கூறினார்.

இன்று, சிவாவின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மண்டபம் நிறைய இலக்கியவாதிகள், கவிஞர்கள், ஆசிரியர்கள், பிரமுகர்கள் ஆகியோர் உள்ளனர். இந்த கூட்டம் தமிழுக்காக வந்ததா? அல்லது சிவாவிற்காக வந்ததா? என்று கேட்ட அவர், இதேபோன்று அனைத்து தமிழ்ப்படைப்புகளின் வெளியீட்டு விழாவிலும் ஆதரவு பெருகி வழிய வேண்டும் என்றார்.

தனது படைப்புகள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு பிறகு நூலாக தொகுப்பட்டுள்ளதாக வரவேற்புரையாற்றிய கவிஞர் சிவா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles