
கிள்ளான், பிப் 15-
அடுத்த வாரம் முதல் நாடு தழுவிய 2025 ஆம் ஆண்டுக்கான அளவில் பள்ளிகள் ஏக காலத்தில் தொடங்குகிறது.
மீண்டும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் புத்தக பைகள், புத்தாடைகளை வாங்கி உள்ளனர்.
இந்நிலையில் இன்று கிள்ளான்
நாடாளுமன்ற மக்கள் சேவை மையம், கிள்ளான் கவுன்சிலர் அருள்நேசன், தாமான் சூரியா பெண்டாமர் & Bro’s Barbershop சகோதரர்களின் முடிதிருத்தும் கடை ஏற்பாட்டில் 2025 Back to School பருவத்துடன் இணைந்து இலவச முடித்திருத்துமா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் உற்சாகத்துடன் சிகை அலங்காரம் செய்து கொண்டனர்.
இந்த நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

