
வரும் பொதுத் தேர்தலில் கோம்பாங் நாடாளுமன்ற தொகுதியில் அஸ்மின் அலி வெற்றி பெற முடியுமா என்று கெஅடிலான் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வியை எழுப்பியுள்ளார்.
மற்ற விவகாரத்தில் அஸ்மின் அலி ஏன் தலையிட வேண்டும்.
அவர் தொகுதியில் வெற்றி பெற முடியுமா என்பதை அவர் யோசிக்க வேண்டும்.
அதை விடுத்து கெஅடிலான் உட்பட மற்ற விவாகரங்களில் அவர் தலையிடக் கூடாது.
கோம்பாங்கில் அஸ்மின் அலி வெற்றி பெறுவது எளிதல்ல.
நம்பிக்கை துரோகிகளுக்கு வரும் பொது தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார் அவர்.