
கோலாலம்பூர் பிப் 17-
சமூக வலைதளங்களில் வெளியான காணொளியில், ஒரு அங்காடி ( Penjaja ) கடை உரிமையாளர் ஒருவர் தன் கடையின் மேசையில் சோளம் கெலிங் (keling) மக்களுக்கு விற்பனைக்கு இல்லை என்று எழுதி வைத்துள்ளார். இந்த செயலை பார்த்த ஒரு இந்திய பெண் இவ்வாறான போக்கு சரியில்லை , அந்த அறிவிப்பு தாளை நீக்குமாறு அந்த கடை உரிமையாளரிடம்
கேட்டுகொண்டபோது , அதற்கு அவர் மிக கோபத்துடன் நடந்து கொண்டதாக அந்த பெண் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு மக்களிடத்தில் குறிப்பாக இந்திய சமுதாயத்தின் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை.
தொடக்கக் காலத்தில் கெலிங் எனும் சொல் கலிங்க நாட்டைக் குறிக்கும் சொல்லாகவும் , இந்தியாவின் கலிங்கப் பேரரசுடன் தொடர்புபடுத்தி ஒரு நல்ல ஒரு சொல்லாகப் பயன்படுத்தப் பட்டு வந்தது.
கலிங்கம் என்பது இந்திய நாட்டில் ஒரு மாநிலமான ஒடிசாவை (Odisha) குறிக்கும் சொல்லாகும். கலிங்கப் பேரரசு 2000 ஆண்டுகளுக்கும் முந்திய பேரரசுகளில் ஒன்றாகும்.
ஆனால் பிற்காலத்தில் கெலிங் என்ற சொல் இந்திய சமூகத்தினர் மீது ,குறிப்பாக மலேசிய இந்தியர்களை இழிவுபடுத்தும் ஒரு தரக்குறைவான சொல்லாகத் மாறிப் போனது.
பல்வேறுபட்ட இனம், மொழி, மதம், கலாசாரம் கொண்டுள்ள நாம், மலேசியர்கள் என்ற ஒரே உணர்வோடு இந்த நாட்டில் வாழ்து கொண்டிருக்கிறோம்.
மலேசியா என்னும் உன்னத நாட்டைக் கட்டமைப்பதில் இனம்⸴ மொழி⸴ மதம் கடந்து மலேசியர்கள் என்னும் ஒற்றுமையே காரணமாகக் திகழ்கிறது.
இனங்களை பற்றிய குறியீடு, விவாதம் மற்றும் கலந்துரையாடல் எப்பொழுதும் ஒற்றுமையை வளர்க்க வேண்டுமே ஒளிய, மக்களிடையே பிரிவினை அல்லது இன சிக்கல்களை ஏற்படுத்த கூடாது.
பல்லின மக்கள் வாழும் மலேசிய நாட்டில், நாங்கள் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறோம். ஒரு சில நபர்களின் தவறான செயல்களால் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி , நாட்டில் இன சிக்கல்கள் உருவக வழிவகுக்கிறது
ஒற்றுமை துறை அமைச்சு இந்த செயலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கணேசன்
பகாங் மாநிலத்தின்
உரிமை அரசியல் இயக்கத்தின் பொறுப்பாளர்