பெட்டாலிங் சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியராக புவனேஸ்வரன் பதவி ஏற்றார்!

கோலாலம்பூர் பிப் 17-
பெட்டாலிங் கம்போங் பாசிர் சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியராக திரு.புவனேஸ்வரன் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

இன்று நாடு தழுவிய அளவில் பள்ளிகள் ஏக காலத்தில் திறக்கப்பட்டன.

அந்த வகையில் பெட்டாலிங் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் உற்சாகத்துடன் காலடி எடுத்து வைத்தனர்.

புதிய தலைமை ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்ட புவனேஸ்வரனுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பெட்டாலிங் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெகதீஸ்வரன் தேவராஜன் கூறுகையில் கடந்த ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு ஏற்றேன்.

எனது தலைமையிலான பெற்றோர் ஆசிரியர் சங்கம் பள்ளி மேம்பாட்டிற்கு கடுமையான உழைத்து வருகிறது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles