இந்த சோளம் இந்தியர்களுக்கு அல்ல! சம்பந்தப்பட்ட வியாபாரி மன்னிப்பு கோரினார்

கோலாலம்பூர் பிப் 17-
இந்த சோளம் இந்தியருக்கு விற்பனைக்கு இல்லை என்று வைரலான வீடியோ பதிவை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வியாபாரி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த சோளம் இந்தியர்களுக்கு விற்கப்படாது என்ற வீடியோ பதிவு கடந்த இரு நாட்களாக சமூக வலைத் தளங்களில் வைரலாகி நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிப்பாங் கோத்தா வாரிசானில் பசார் மாலாமில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சோளம் கெல்லிங்கிற்கு விற்கப்படாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது இந்திய சமுதாயத்தை நேரடியாக இழிவுப்படுத்தும் வகையில் இருந்ததால் பலர் வன்மையாக கண்டித்தனர்.

சம்பந்தப்பட்ட வியாபாரியின் செயலை ஒரு இந்திய பெண் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார்.

இதனிடையே சம்பந்தப்பட்ட சோள வியாபாரி அப்துல் அஸிஸ் மூசா என்பவர் இந்த சம்பவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்திய சமுதாயத்தை இழிவு படுத்துவது எனது நோக்கம் அல்ல.
என்னை மன்னித்து விடுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles