
இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaingar Magalir Urimai Thogai) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர்.
இன்னும் சிலர் இந்த திட்டத்தில் தகுதியிருந்தும் பயனாளிகளாக இருக்கவில்லை.
அவர்களுக்காக விரைவில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதிகபட்சம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
அதாவது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது ஏற்கனவே தகுதியிருந்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்காதவர்கள் இந்த திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் இப்போது புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் சொன்னார்.

