

நாட்டில் குற்றச் சம்பவங்களை கையாள இன்னமும் சொஸ்மா சட்டம் தேவைப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இன்று தெரிவித்தார்.
சொஸ்மா சட்டத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டை பக்கத்தான் ஹரப்பான் கொண்டிருக்கிறது என்று உள்துறை அமைச்சருக்கு நினைவுறுத்த விரும்புவதாக ஜசெக துணை தலைவர் கோபிந்த் சிங் டியோ நேற்று கடுமையாக குறை கூறி இருந்தார்.
மனிதர்களுக்கு எதிரான இந்த கொடூர சட்டத்தை அகற்றுங்கள் இல்லையெனில் திருத்தம் செய்யுங்கள் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி உட்பட மனித உரிமை ஆணையங்கள் கடுமையாக வலியுறுத்தி உள்ளன.
இந்த விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்ட டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன், சொஸ்மா சட்டம் இல்லை என்றால் கடும் குற்றங்கள் உட்படுத்திய கும்பல்களை கைது செய்வது கடினம் என குறிப்பிட்டுள்ளார்.

