மொரோக்கோவை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது பிரான்ஸ்

கட்டார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்திற்கு நடப்பு உலக சாம்பியன் பிரான்ஸ் முன்னேறியது.

இன்று அதிகாலை நேரத்தில் நடைபெற்ற மொரோக்கோவுக்கு எதிரான பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் 5வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோலை அடித்தார்.

பின்னர் 79 ஆவது நிமிடத்தில் மற்றொரு பிரான்ஸ் வீரர் கோலோ முவானி தனது அணிக்கான 2ஆவது கோலை அடித்தார்.

இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் உலகக் கிண்ண தொடரில் 4ஆவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டாலும் மொராக்கோ, அரை இறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்தது.

எனினும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் அந்த அணி வெளியேறியதால் அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.0 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles