Batang Kali – genting மலைச்சரிவில் மோசமான நிலச்சரிவில் குழந்தை உட்பட 16பேர் பரிதாப மரணம் -17 காணவில்லை

உலு சிலாங்கூர் பத்தாங் காலி – கெந்திங் மலை தொடரில் கனத்த மழையுடன் கூடிய ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் குழந்தை உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் எழுவர் காயம் அடைந்த வேளையில் 92 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

17 பேர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.

பத்தாங் காலி, ஜாலான் கெந்திங்கில் Father Organic Farm என்ற இடத்தில் இன்று அதிகாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் காணாமல்
போயிருப்பவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை இலாகா அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles