மீட்புப் பணிகளை கவனமாக மேற்கொள்வீர்!
பிரதமர் அன்வார் உத்தரவு

கெந்திங்- பத்தாங் காலி சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டர்களை மீட்கும் நடவடிக்கையை கவனமாக மேற்கொள்ளும்படி அனைத்து அரசுத் துறைகளுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பான சமீபத்திய நிலவரங்களை ஊராட்சி மேம்பாட்டு அமைச்சர், சுற்றுச் சூழல் அமைச்சர் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசாரிடமிருந்து தமது தரப்பு பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

எனினும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மீட்புப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதற்கு நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles