
சென்னை: பிப் 19-
கல்வி நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் பாசிச போக்கிற்கு எதிராக தமிழ்நாடே கொந்தளித்துள்ளது.
தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய ரூ.2,152 கோடியை உ.பி., குஜராத் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார்கள் என ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
உங்க அப்பா வீட்டு காசை கேட்கவில்லை; பிச்சையோ, கடனோ கேட்கவில்லை.
தமிழ்நாடு மக்கள் செலுத்திய வரிப்பணம், எங்களின் உரிமையைத்தான் கேட்கிறோம். தமிழ்நாடு கல்வியில் எத்தனையோ சாதனைகளைச் செய்து வருகிறது.
ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு தமிழ்நாடு அடிபணியும் என்று நினைத்தால், அது கனவிலும் நடக்காது என அவர் கூறியுள்ளார்.

