5 மாநிலங்களுக்கு ரூ.1554 கோடி பேரிடர் நிதி; தமிழகம், கேரளாவுக்கு அறிவிப்பில்லை!

புதுடெல்லி: தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1554.99 கோடி நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தற்போது 5 மாநிலங்களுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ரூ.1554.99 கோடியில், ஆந்திராவிற்கு ரூ.608.08 கோடியும், நாகாலாந்திற்கு ரூ.170.99 கோடியும், ஒடிசாவிற்கு ரூ.255.24 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ.231.75 கோடியும், திரிபுராவுக்கு ரூ.288.93 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது/

தமிழகம், கேரளத்துக்கு அறிவிப்பு இல்லை.. கடந்த ஆண்டு தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனை ஒட்டி புயல் நிவாரணமாக ரூ.37,000 கோடியை தமிழக அரசு கோரியிருந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அறிவிப்பில் தமிழகத்துக்கு எந்த ஒதுக்கீடும் இல்லை. இதேபோல் வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட கடும் இயற்கை பேரிடர்களை எதிர்கொண்ட கேரளாவுக்கும் நிதி ஒதுக்கீடு சார்ந்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles