
கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்காக தமிழ்நாடு கல்வித் துறையுடன் ஒப்பந்தம் செய்ய மஇகா தயாராக உள்ளது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு வருகையாக மலேசியா வந்துள்ளார்.
அவருடன் கல்வி சுற்றுலா மேற்கொண்டு 50 மாணவர்களும் ஆசிரியர்களும் வந்துள்ளனர்.
“இங்குள்ள மாணவர்கள் நாளை எத்தனை உயரத்திற்கு சென்றாலும் கல்வியமைச்சருடனான இந்த மலேசிய பயணத்தை அவர்கள் மறக்க மாட்டார்கள்.
“அதே வேளையில் அடுத்த முறை நீங்கள் மலேசியாவுக்கு வரும் போது முன்கூட்டியே எங்களிடம் கூறுங்கள்.
“அறிஞர் அண்ணாவுக்கும் கலைஞர் கருணாநிதிக்கு மாபெரும் கூட்டங்களை நடத்திய நாடு மலேசியா.
“அதே போன்று கல்வித் துறை அமைச்சருக்கும் பெரிய கூட்டம் நடத்தலாம்.
“மேலும் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ பல்கலைக்கழகத்தை நடத்தும் ஒரே கட்சியாக மஇகா விளங்குகிறது.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் கெடா மாநிலத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
அடுத்த முறை அப் பல்கலைக்கழகத்திற்கும் நீங்கள் வரலாம்
குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள மாணவர்களையும் உயர் கல்வி பயில ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பலாம்.
இதன் அடிப்படையில் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்காக தமிழ்நாடு கல்வித் துறையுடன் ஒப்பந்தம் செய்ய
மஇகா தயாராக உள்ளது.

