மீண்டும் பள்ளிக்கு போகலாம் – அரசு மானியம் ஒவ்வொரு ஆண்டும் உயர்கிறது!!சிவநேசன் தகவல்!

மீண்டும் பள்ளிக்கு போகலாம் திட்டத்திற்காக பேரா மாநில அரசாங்கத்தின் மானியம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கல்விக்கான ஒதுக்கிட்டில் மாநில அரசு தீவிர முனைப்பும் காட்டி வருவதாக மாநில மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வு ஆட்சிகுழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் கல்வி,கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்காக பேரா மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளையும் அதற்கான நிதி ஒதுக்கீடு விடயத்திலும் நனிச் சிறப்பாக இயங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

மீண்டும் பள்ளிக்கு போகலாம் திட்டத்தை சுங்கை சட்டமன்ற. தொகுதியில் தொடக்கி வைத்து பேசுகையில் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுங்கை தொகுதிக்கு உட்பட்ட ஆரம்பப் பள்ளி,இடைநிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 160 பேருக்கு பள்ளிச்சீருடை உட்பட பள்ளி உபகாரணங்கள் என ஒவ்வொருவருக்கும் தலா வெ.150 மதிப்பிலான உபகாரணங்கள் வழங்கப்பட்டது.

கடந்தாண்டு இத்திட்டத்திற்கு வெ.25 ஆயிரம் ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு வெ.30 ஆயிரம் ஒதுக்கப்பட்டதையும் நினைவுக்கூர்ந்த சிவநேசன் மாநில அரசாங்கம் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும் பெரும் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தும் வருவதை விவரித்தார்.

அதேவேளையில்,சுங்கை தொகுதியில் கல்வி சார்ந்த உதவிகளுக்காக தனது சேவை மையம் எப்பவுமே திறந்தே இருக்குமென்றும் எப்ப வேண்டுமானால் எனது சேவை மையத்தை நாடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் நான்கு தமிழ்ப்பள்ளிகள் உட்பட19 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட வேளையில் பள்ளியின் தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள்,பள்ளி முதல்வர்கள் என நிறைவாக பலர் கலந்தும் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles