6 ம் ஆண்டு மற்றும் படிவம் 1 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

பேராக் மாநில ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில் 6 ம் ஆண்டு மற்றும் படிவம் 1 பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான பிரத்தியேக வகுப்புகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்திய மாணவர்கள் தேசிய மொழி, ஆங்கிலம் மற்றும் தமிழ்மொழியில் புலமை பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக இந்த வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக பேராக் மாநில ஸ்ரீ முருகன் நிலைய ஒருங் கிணைப்பாளர் முனைவர் சேகர் நாராயணன் கூறினார்.

முதல் கட்டமாக மாணவர்கள் பதிவு வரும் 2.3.2025( ஞாயிற்றுக்கிழமை) காலை மணி 8.30 க்கு தொடங்கி காலை 11.30 க்கு முற்றுப்பெறும். இப்பதிவு ஈப்போ புந்தோங் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது. ஆகையால், மாணவர்கள் இந்த பதிவில் கலந்துக்கொள்ள வரவேற்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, 6 ம் ஆண்டில் பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இடைநிலைப்பள்ளி செல்லவுள்ளதால் அவர்களின் தேசிய மொழி வளத்தையும் மற்றும் மொழி ஆளுமையை இத்தகைய சிறப்பு வகுப்புகள் வாயிலாக வளப்படுத்தப்படும். அத்துடன், இடைநிலைப்பள்ளிகளின் புதிய கலாச்சார பாணிகள் மற்றும் புதிய நண்பர்கள் போன்ற சவால்களை அவர்கள் எதிர்நோக்குவர். ஆகவே, அவர்களுக்கு இத்தகைய வாராந்திர வகுப்புகள் வாயிலாக அதிக பட்டறிவு மற்றும் புரிந்துணர் வும் கிடைக்கப்பெறுவார்கள் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

இங்கு போதிக்கும் ஆசிரியர்கள் பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் ஆவார்கள். அவரவர் தங்களது பாடங்களில் சிறப்பு திறன் மிக்கவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு தங்களது கல்வியில் சிறந்து விளங்க இந்த வகுப்புகளில் பயிலும் படி அவர் அன்போடு கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles