பொருட்களின் விலை உயர்கிறது! மக்கள் பெரும் அவதி!!! தேசிய முன்னணி, மடானி அரசு பெரும் சோதனையை எதிர்நோக்கலாம்

கோலாலம்பூர் மார்ச் 1 –
நாட்டில் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் தெரிவித்தார்.

தற்போது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு வழங்கப்பட்ட கூடுதல் உத்தரவு குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம்.

இந்த விவகாரம் சட்ட விசாரணையில் உள்ளது. இதற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் ஆயிர் கூனிங் இடைத்தேர்தல், சபா தேர்தல்களும் நடைபெறவுள்ளன.

தற்போது மக்கள் வாழ்வாதார பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகின்றன.

முன்பு பி40 ஏழை என்பார்கள். ஆனால் தற்போதைய விலைவாசி உயர்வால் எம்40 உட்பட அனைவருமே ஏழைகள் ஆகிவிட்டனர்.

ஆகவே வரும் தேர்தல்களுக்கு முன் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் அரசாங்கம் உரிய தீர்வு காண வேண்டும்.

இல்லையென்றால் இது தேசிய முன்னணி, மடானி அரசு பெரும் சோதனையை எதிர் நோக்கும்.

இதை மலேசியா மக்கள் சத்தி கட்சி ஒரு எச்சரிக்கையாக விடுக்கிறது.

அம்னோ தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின் டத்தோஸ்ரீ தனேந்திரன் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles