கோல்ஃப் துறையில் இந்திய இளைஞர்களுக்கு பயிற்சிகளுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் MISI உத்தரவாதம் அளிக்கிறது!

மா.பவளச்செல்வன்

குலாய், மார்ச் 3 –

மனிதவள அமைச்சிந் கீழ் செயல்பட்டு வரும் மலேசிய இந்திய திறன் முன்னேடுப்பு  அமைப்பு (MiSI) இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் கூடிய திறன் பயிற்சியின் இரண்டாவது குழுவின்  பட்டமளிப்பு விழாவை நடைபெற்றது.

மலேசிய கோல்ஃப் அசோசியேஷன் (எம்ஜிஏ) மற்றும் ஏஎம்எஸ் கேடி அகாடமியுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, மலேசியாவில் வளர்ந்து வரும் கோல்ஃப் தொழிலில் ஈடுபட இந்திய இளைஞர்களை ஊக்குவிப்பதுடன் உள்ளூர் தொழிலாளர்களின் வாய்ப்புகளை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏஎம்எஸ் Caddy  அகாடமியின் அறிக்கையின்படி, MiSI திறன் பயிற்சியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பயிற்சி முடிந்த பிறகு வேலைக்கான உத்தரவாதத்தையும் வழங்குகிறது.

ஏஎம்எஸ் Caddy அகாடமியின்படி, “பங்கேற்பாளர்கள் காப்பீட்டுத் தொகை, ஒரு கட்டமைக்கப்பட்ட தொழில் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தேசிய குறைந்தபட்ச ஊதிய அளவை விட அதிக சம்பளம் பெறுகின்றனர்,” என ஏஎம்எஸ் Caddy அகாடமி தெரிவித்துள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவில் தொடர்புதுறை துணை அமைச்சரும், கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

“மலேசியா முழுவதும் 4,000 Caddy வேலை வாய்ப்பு  இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் தற்போதைய நிலவரப்படி 2,000 பேர்களுக்கு மட்டுமே இந்த Caddy வேலை கிடைக்கிறது. இந்த பணியிடங்களில் அதிக எண்ணிக்கையிலான  வெளிநாட்டு பணியாளர்களாக உள்ளனர்.
ஆனால் இந்த வேலை வாய்ப்பு.  உள்ளூர் மக்களுக்காக ஒதுக்கப்பட்டதாகும். எனவே, மலேசியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி,  இந்த  Caddy வேலையை ஒரு தொழில் வாய்ப்பாக உருவாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், KESUMA இன் சிறப்புப் பணி அதிகாரி (PTTK), டிக்காம் லூர்து, இந்திய இளைஞர்களுக்கு நீண்டகால தொழில் வாய்ப்புகளை வழங்குவதில் MiSI இன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், அது மட்டும் இன்றி மனிதவள அமைச்சர் ஸ்டிவன் சிம்மின் இந்திய சமூகத்தின் தூர நோக்க பார்வையுடன் இணைந்திருக்கும்  MiSIயின் நிலைப்பாடும்,        செயல்ப்பாடும் பாராட்டும் வகையினிலேயே இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

லோ ஹாக் லாய் நிர்வாக இயக்குநர் தலைமையிலான ஏஎம்எஸ் Caddy அகாடமி, 2029ஆம் ஆண்டுக்குள் 2,300 கேடிகளுக்கு பயிற்சி அளித்து இடமளிக்க இலக்கு வைத்துள்ளது.

இத்தகைய பயிற்சிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்
MisiKesuma அகப்பக்கத்தை வளம் வாருங்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles