மூவரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் -டத்தோ லோகபாலா வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 5-
பிற சமயத்தை இழிவுபடுத்தும் சம்பவத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபால மோகன் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்

தைப்பூசத்தில் காவடி ஆட்டத்தை இழிவுபடுத்திய ஏரா எப்.எம்.காணொளி இந்துக்களின் மனதை வெகுவாகப் பாதித்துள்ளது.

இதுபோன்ற சம்பவம் இனியும் தொடராதிருக்க சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தங்கள் செயலுக்கு மூவரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

மலேசியா பல்வேறு இனங்கள், மதங்களுக்கிடையே பரஸ்பர மரியாதை, நல்லிணக்க கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சமயமும் இத்தகைய உயரிய பண்புகளையே வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்துக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கையை இழிவுபடுத்துவது எரா எஃப்எம் அறிவிப்பாளர்களின் சிறுமைத்தனத்தையேக் காட்டுகிறது என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் சுட்டிக் காட்டினார் .

இவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கையானது வருங்காலத்தில் இதுபோன்ற விவகாரம் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles