மார்ச் 23 ஆம் தேதி நேரடி விவாதம்! ஷம்ரிக்கு டத்தோஸ்ரீ சரவணன் நேரடி சவால்

கோலாலம்பூர் மார்ச் 23-
இந்து மதத்தை இழிவுபடுத்திய ஷம்ரி வினோத்துடன் வரும் மார்ச் 23ஆம் தேதி திட்டமிட்டப்படி நேரடி விவாதம் நடைபெறும் என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் சவால் விடுத்துள்ளார்.

இடத்தை நீங்கள் தேர்வு செய்துப் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.

இந்து மதத்தை தொடர்ந்து இழிவுப்படுத்தி வரும் ஜம்ரி வினோத்தின் வாயை அடைக்க வேண்டும் என்ற நோக்கில் விவாதத்திற்கு வர தயாரா என நான் நேற்று சவால் விடுத்தேன்.

இந்த சவாலை ஏற்றுக் கொள்கிறேன் என ஜம்ரி வினோத் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆனால் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, முகநூலில் கருத்துகள் பகுதியை அவர் மூடியிருப்பது விசித்திரமாக உள்ளது என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இருந்தாலும் அவருடன் நேரடி விவாதம் செய்ய நான் தயாராக உள்ளேன்.

வரும் மார்ச் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு மலேசிய தமிழ்மொழி மண்டபத்தில் இந்த விவாதம் நடைபெறும்.

காவடி ஏந்தும் இந்துக்கள் பேய் பிடித்தது போலவும், கள்ளு குடித்த நிலையில் நடனமாடும்போது வேல் வேல் என்று சொல்வார்கள் என்று ஷம்ரி வினோத் கூறியிருந்தார்.

இந்த தலைப்பில் விவாதம் வைத்து கொள்ளலாம்.

விவாதம் நடக்கும் இடத்தை நான் தேர்வு செய்துள்ளேன்.

இருப்பினும் தலைநகரில் எந்த இடத்தையும் தேர்வு செய்யும் சுதந்திரத்தை நான் உங்களுக்கு வழங்குகிறேன். அந்த இடத்திற்கு வரவும் நான் தயார்.

முகநூலில் வாய்கிழிய பேசும் நீங்கள் சவாலை ஏற்றுக் கொண்டது போல் துணிவுடன் விவாதத்திற்கு வர வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles