
கோலாலம்பூர் மார்ச் 7-
தைப்பூசத்தில் வேல் வேல் காவடி நடனத்தை கேலி செய்த ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் ஏரா எப்.எம். விவகாரம் மத்தியில் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஷம்ரி வினோத் இந்து சமயத்தை மிகவும் இழிவு படுத்தி இருக்கிறார்.
இந்த நாட்டில் இனங்கள் மத்தியில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அவரின் செயல் மிகவும் மோசமாக உள்ளது என்று மகிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் ஒருங்கிணைப்பு பேரவைத் தலைவர் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார் சாடினார்.
ஏரா எப்.எம். ஊழியர்கள் மீது மல்டிமீடியா தகவல் தொடர்பு துறை உடனடி நடவடிக்கை எடுத்ததை பெரிதும் வரவேற்கிறேன்.
இப்போது ஷம்ரி வினோத் இந்து சமயத்தை மிகவும் இழிவு படுத்தியிருக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.
அவர் இந்து மதத்தை இழிவுபடுத்த்
தருவது இது முதல் முறையல்ல.
ஏற்கெனவே பலமுறை அவர் இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி இருக்கிறார்.
இவருக்கு எதிராக பல புகார்கள் செய்யப்பட்டுள்ளன.ஆனால் தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நாட்டில் இனங்கள் மத்தியில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அவரின் செயல் அமைந்துள்ளது.
பல்லின மக்கள் வாழும் மலேசியா திருநாட்டில் நல்லிணக்கத்திற்கு யார் பங்கம் விலை வைத்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து பிள்ளைகளும் எனது பிள்ளைகள் என்று அடிக்கடி கூறி வருகிறார்.
அந்த வகையில் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க துடிக்கும் ஷம்ரி வினோத் போன்றோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டத்தோ கண்ணா சிவகுமார் தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

