டத்தோ விருது பெற்ற அமைச்சர் பாமி பாட்சிலுக்கு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து!

கோலாலம்பூர் மார்ச் 7-
கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு தகவல் தொடர்பு அமைச்சர் பாமி பட்சில் டத்தோ விருது பெற்றார்.

2025 ஆம் ஆண்டிற்கான கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு மொத்தம் 32 பேர் சிறப்பு விருதுகளை பெற்றனர்.

இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற இவ்விருதளிப்பு விழாவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் இருந்து அவர்கள் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது துணைவியார் டத்தோஶ்ரீ டாக்டர் வான் ஹசிசா வான் இஸ்மாயில் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்..

மேலும் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விருதுகள் பெற்றவர்களின் பட்டியலில் பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சரான டாக்டர் ஷலேஹா முஸ்தபா முதலிடத்தில் உள்ளார்.

அவர் டத்தோஶ்ரீ விருதை பெற்ற வேளையில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் டத்தோ விருது பெற்றார்.

இதனிடையே டத்தோ விருது பெற்ற தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பாட்சிலுக்கு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் செ.வே.முத்தமிழ் மன்னன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு அமைச்சர் பாமி பட்சில் பக்கப்பலமாக இருக்கிறார்.

பெர்னாமா காசே அவனா திட்டத்தின் கீழ் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த 20 உறுப்பினர்களுக்கு நிதியுதவி கிடைக்க அமைச்சர் பாமி பட்சில் பேருதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொடர்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் டத்தோ பாமி பட்சில் தமிழ் ஊடகங்களுடன் இணைந்து சிறந்த முறையில் சேவையாற்றி வருவது பாராட்டுக்குரியது என்று முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles