சிரியா உள்நாட்டு போர்: 745 அப்பாவி பொது மக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் சிரிய அதிபர் பஷர் ஆசாத்-க்கு ஆதரவானோர், பாதுகாப்பு படையினர் மற்றும் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட கொலைகளில் இதுவரை மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 750 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.

பிரிட்டனை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பொது மக்களில் 745 பேரும், அரசு பாதுகாப்பு படைடை சேர்ந்த 125 பேர் மற்றும் முன்னாள் அதிபர் பஷார் ஆசாத்-இன் ஆதரவு கொண்ட ஆயுத படையை சேர்ந்த 148 பயங்கரவாதிகள் இந்த உள்நாட்டு பேரில் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles