
ஜொகூர் பாருவில் அமைந்துள்ள KSL கடைத்தொகுதியின் கூரை திடீரென்று இடிந்து விழுந்தது.
பொதுமக்கள் பலர் அதைக் காட்டும் காணொளிகளையும் படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டனர்.
இந்த விபத்து நேற்று மாலை 6 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது கடைத்தொகுதியில் இருந்தோர் பதிவுகளுக்குக் கீழ் கருத்து தெரிவித்திருந்தனர்.
அப்போது பெரிய சத்தம் கேட்டதாகவும் இரண்டாம் மாடியில் கூரை பெரிய அளவில் இடிந்து விழுந்ததாகவும் அவர்கள் கூறினர்.
கடைத்தொகுதியில் இருந்த சில கடைகள் அதனால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆனால் யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
சம்பவம் குறித்துக் கடைத்தொகுதி அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.