உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பிறை எம்பிபிகே ஏற்பாட்டில் மகளிர் தின விழா விமரிசையாக நடைபெற்றது

பிறை மார்ச் 10-
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பினாங்கு எம்பிகேகே ஏற்பாட்டில் நேற்று மகளிர் தின விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

பிறை எம்பிபிகே தலைவர் ஸ்ரீ சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
செபெராங் பிறை கவுன்சிலர் பொன்னுத்துரை மற்றும்
பிறை சட்டமன்ற தொகுதி இயக்குனர் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

தேகப்பயிற்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மகளிர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

அதிர்ஷ்ட குலுக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles