
கோலாலம்பூர், மார்ச் 11-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தில் வேல் வேல் என்று காவடி எடுப்பவர்கள் போய்கள் என்றும் போதையில் உள்ளவர்கள் என்று இந்து மதத்தை இழிவுபடுத்திய ஷம்ரி வினோத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய சமுதாயம் ஒன்று திரள வேண்டும் என்று வேலன்படை இயக்கத்தின் தலைவர் சுரேந்திரன் பலராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய ஷம்ரி வினோத் இதற்கு முன்னர் பலமுறை இந்து சமயத்தை மிகவும் இழிவு படுத்தி இருக்கிறார்.
அவருக்கு எதிராக நூற்றுக்கணக்கான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்போது தைப்பூசத் தை முன்னிட்டு வேல் வேல் காவடியை மிகவும் கேவலப்படுத்தி இருக்கிறார்.
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்த விவகாரத்தில் ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் துணிந்து குரல் கொடுத்து ஷம்ரி வினோத்தை விவாதத்திற்கு அழைத்து இருக்கிறார்.
இது ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் தன்மானப் பிரச்சினை.
ஆகவே இந்த விவகாரத்தில் அனைவரும் ஒன்று சேரும்படி சுரேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்

