
சமீபத்தில் (Era FM) ஏரா பண்பலை வானொலியில் தைப்பூச காவடி ஆட்டத்தை செய்தி வாசிப்பாளர் ஒருவர் தன்னுடைய சக ஊழியர்களுக்கு ஆடி காட்டி கேலி செய்த காணொலி இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த செயலை இந்துக்கள் வன்மையாக கண்டித்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
காவல் துறையினர் ஏரா பண்பலை வானொலியின் ஊடகவியலாளர்களின் மீது விசாரனை நடத்தி வரும் வேளையில் ஏரா பண்பலை ஊடகவியலாளர்கள்
செய்த செயலுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய சம்ரி வினோத் என்ற நபர் தனது முகநூல் பதிவில், காவடி ஆட்டத்தை மேலும் கொச்சைப்படுத்தும் விதமாக கருத்தை வெளியிட்டார்.
இது இந்துக்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் , சம்ரி வினோத் மீது நிறைய இந்துக்கள் காவல் துறையில் புகார் அளித்தனர்.இதனை தொடர்ந்து சம்ரியின் சர்ச்சைக்குரிய பதிவை மேத்தா நிறுவனம் (Meta Facebook) நீக்கியுள்ளது.
ஆனால் , தற்பொழுது சம்ரி வினோத் அந்த பதிவை மீண்டும் அவரின் முகநூலில்( Facebook) வெளியிட்டிருக்கிறார். இந்த செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
பல்லினங்கள் நிறைந்த மலேசிய நாட்டில் இது போன்ற பதிவுகள் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று தெரிந்தும் அவர் மீண்டும் அந்த பதிவை தனது முகநூளில் ( Facebook ) வெளியிட்டிருக்கிறார் என்றால் , இது இந்துக்களின் உணர்வுகளை சீண்டி நாட்டில் எப்படியாவது மத கலவரத்தை ஏற்படுத்த சதி நடப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.
மதவாத அரசியல் அல்லது செயல்கள் மலேசியா போன்ற பல்லினங்கள் வாழும் நாட்டில் நிறைய சிக்கலை உருவாக்கும் என்பது நாம் அறிந்ததே . சம்ரி வினோத் செயலுக்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் நல்லிணக்கம் சீர்குலைந்தால் ஒரு நீடித்த நிலையான அரசியல் சூழல் உருவாகுவதில் தடைகள் ஏற்படும்.
அதனால் இனம் மற்றும் மத கலவரம் எந்த முறையில் வந்தாலும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பொறுப்பும் கடமையும் அரசாங்கத்துக்கு உண்டு.இனம் மற்றும் மத கலவரத்தை தூண்டும் எந்த ஒரு செயலையும் மலேசியர்கள் நாம் அனுமதிக்க கூடாது, அவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
கணேசன்
உரிமை
பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர்

