
இஸ்லாமபாத் : மார்ச் 12-
பாகிஸ்தானில் ரயிலுடன் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 400 பேரில் 155 பேரை பாதுகாப்புப் படை மீட்டது. பிணைக் கைதிகளாக பிடித்த பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 27 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
மேலும் பிணைக் கைதிகளாக உள்ள 200க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஆனால் பிணைக் கைதிகளை சுற்றி தற்கொலைப் படையினர் இருப்பதால் மீட்புப் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது.

