
கோலாலம்பூர் மார்ச் 13-
வரும் ஞாயிற்றுக்கிழமை ஜசெக கட்சியின் மாநாடு மற்றும் உச்சமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
நாடாறிந்த சமுதாய போராட்டவாதி மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் இம்முறை ஜசெக உச்சமன்ற பதவிக்கு போட்டியிடுகிறார்.
அன்பிற்கினிய DAP வாக்காளர்களே, நான் இந்த தேர்தலில் எண் 17 போட்டியிடுகிறேன். இந்த CEC தேர்தலில் ஆதரவு வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் நம்பிக்கை எனக்கு ஒரு பெரிய பொறுப்பாகும், மேலும் உங்கள் ஆதரவுடன் நான் சமூகத்தின் வளர்ச்சிக்கும், நீதிக்கும், மற்றும் கட்சியின் மேம்பாட்டிற்கும் முழுமையாக அர்ப்பணிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
நான் நேர்மையாகவும், கடின உழைப்புடன், மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து செயல்பட உறுதியாக இருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது! தயவுசெய்து உங்கள் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வழங்குங்கள்
என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
அன்புடன்
கணபதி ராவ்

