ஆலயங்கள் சமுகப் பணியிலும் தொண்டாற்ற வேண்டும் ! டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்து

பங்கோர், மார்ச் 15-
ஆலயங்கள் சமய வளர்ச்சிக்கு சேவைகள் வழங்கி வரும் அதே சமயத்தில் சமுக நல காரியங்களில் சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ம.இ.கா. தேசியத். துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார்.

அந்த வகையில் பல ஆலயங்கள. அந்த சேவை வரங்கி வருவது மகிழ்சியை அளிப்பதாகவும் அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பங்கோரில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னதாக தோற்றுவிக்கப் பட்ட அருள் மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் அதன் நிர்வாகம் மேற்கொண்டு வரும் சமுகப் பணியை அவர் வெகுவாக பாராட்டினார்.

இந்த ஆலயம் இந்த நாட்டில் மட்டும் அல்ல உலகில் பல் வேறு இடங்களில் வசித்து வரும் இந்துக்களுக்கு மட்டும் அல்ல சுற்றுப் பயணிகளையும் மிகவும் கவரும் ஆலயமாக விளங்கி வருகிறது.

இந்த ஆலயம் மேற்கொண்டு வரும் சேவைக்கு உந்துதல் ஏற்படுத்தும் வகையில் தமது பங்காக வெ. 20 ஆயிரம் வெள்ளியை வழங்குவதாக அறிவித்தார்.

இந்த ஆலயம் மேற்கொண்டு வரும் சமய மற்றும் சமுகப் பணிக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் மற்றும் ஆலயத் திருவிழாவில் கலந்துக்கொண்டு ஆலயத்திற்கு 20 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கிய டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கு ஆலயத் தலைவர் மோகன்தாஸ் நன்றியைத்தெரிவித்துக் கொண்டார் .

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படும் மாசி மக திருவிழாவில் வழக்கம்போல் ஆயிரக்காண பக்தர்கள் நாட்டில். பல் வேறு அடங்களிருந்தும் மற்றும் பல நாடுகளிலும் இருந்து சுற்றுப் பயணிகளும் வருகை அளித்தனர் என்றார்.

ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் அக்கினி சட்டி , கரகம் மற்றும் கரகம் ஏந்தி காணிக்கை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles