
சென்னை மார்ச் 15-
அதிமுகவை பற்றி பேச தடை;கூட்டணி விவகாரம், சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அண்ணாமலைக்கு அமித்ஷா கடைசி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் செய்துகொள்ள அண்ணாமலையௌ தூது விட்டுள்ளார்.
அதிமுகவும் பாஜவும் கடந்த சட்டமன்ற தேர்தலில் இணைந்து பணியாற்றின. அதில் படுதோல்வியை சந்தித்ததால் இருகட்சிகள் தலைவர்கள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி கொண்டனர்.
இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை முறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.
அதேபோல் பாஜ தலைவர் அண்ணாமலை அவரது ஆதரவு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தது.
இதைத் தொடர்ந்து அதிமுக தலைவர்கள் மீது அண்ணாமலை தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, அண்ணாமலை தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி எனவும், எடப்பாடி பழனிசாமியோ ஒரு சாதாரணமானவர் எனவும் கூறினார்.
இதன் காரணமாகவே மோதல் வெடித்தது. அதே நேரத்தில் ஜெயலலிதாவை விட எனது தாய் மற்றும் மனைவி மிகவும் வலிமையானவர் என கூறியதால் அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அதிமுக-பாஜவினரிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த அமித்ஷா, தமிழக பாஜ பொறுப்பாளர் சந்தோஷூடன் பேசினார்.
அப்போது அண்ணாமலையிடம் பேசிய அமித்ஷா, ‘‘நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல. நியமிக்கப்பட்டவர் தான். உங்களது நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பாஜ பல்வேறு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
தங்களது தனிப்பட்ட விவகாரத்தில் அரசியலை சேர்த்து தமிழ்நாட்டில் பாஜவை கால் ஊன்ற முடியாமல் வைத்துள்ளீர்கள். இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு.
அதிமுக பற்றி வாய் திறக்க கூடாது கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்

