
மதுரை: மார்ச் 15-
பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷாவுக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது.
மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் எம்.எஸ்.ஷா பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

