கேப்டன் கணேசன் மறைவுக்கு செராஸ் பெமூடா கிளப் ஆழ்ந்த அனுதாபம்!

கோலாலம்பூர், மார்ச் 18-
நாட்டில் புகழ்பெற்ற செராஸ் பெமூடா கால்பந்து கிளப்பின் கேப்டன் கணேசன் கருப்பையா இன்று காலையில் மரணம் அடைந்தார்.

இவரின் மரணம் செராஸ் வட்டார மக்களுக்கும் செராஸ் பெமூடா கால்பந்து கிளப்புக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செராஸ் பெமூடா கால்பந்து கிளப்பின் கேப்டனாக இருந்து பல போட்டிகளில் கிளப்பை வெற்றி பாதைக்கு வழிநடத்திச் சென்ற பெருமை கணேசனை சாரும்.

அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய கணேசன் மறைவு செய்தியைக் கேட்டு பெரும் வேதனை அடைந்ததாக செராஸ் பெமூடா கால்பந்து கிளப்பின் தலைவர் கனகராஜா தெரிவித்தார்.

கணேசன் அவர்களின் புகழ் என்றென்றும் செராஸ் பெமூடா கால்பந்து கிளப்பில் இடம் பெற்றிருக்கும் என்று அவர் சொன்னார்.

கேப்டன் கணேசன் மறைவுக்கு செராஸ் பெமூடா கால்பந்து கிளப்பின் பொருளாளர் கனகசபை, செயலாளர் நீலமேகம், துணை தலைவர் ராஜேந்திரன், கால்பந்து போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் சத்யா உட்பட கிளப் உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இதனிடையே 19-3-2025 ஆம் தேதி புதன்கிழமை காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை எண் 60-11-02 Flat Sri Sabah, Jalan Cheras Batu 31/2 Kuala Lumpur என்ற முகவரியில் நடைபெறும் இறுதி சடங்கிற்கு பின்னர் அன்னாரது நல்லுடல் செராஸ் மின்சடலையில் தகனம் செய்யப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles