
பெரம்பூர்: தமிழகத்தின் சாபக்கேடு அண்ணாமலை, நீ முடிந்தால் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு பார் என்று அமைச்சர் பி.ேக.சேகர்பாபு சவால்விட்டுள்ளார்/
தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது. அண்ணாமலை போன்ற டூப் போலீஸ் இல்லை. இதுபோன்ற கள்வர்களிடம் இருந்து பாதுகாப்பதால் காவல்துறையினருக்கு தூக்கம் இருக்காதுதான்/
தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக வைத்திருப்பதில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லையென்பதால் தமிழக போலீசாருக்கு இனி தூக்கம் இருக்காது என்கிறார். ஒரு கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை போன்றவர்கள் இருப்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு.
பாஜகவை பார்த்து அச்சப்படும் அளவிற்கு திமுகவினர் கோழைகள் அல்ல. திமுக ஒன்றும் சமரச சுத்த சன்மார்க்க இயக்கத்தை நடத்தவில்லை. ஒரு கண்ணத்தை அறைந்தால் மறு கண்ணத்தை காண்பிக்க. முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
முடிந்தால் அவரை நாள் குறித்து வரக் கூறுங்கள் அந்தப் போராட்டத்தை காவல்துறையினர் இல்லாமல் திமுக தொண்டர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பது தெரியும். அமைச்சர் சேகர்பாபு சவால்விட்டுள்ளார்

