வெள்ளிக்கிழமை வரை நான்கு மாநிலங்களில் தொடர் கனமழைக்கு வாய்ப்புள்ளது!

மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா வெள்ளிக்கிழமை வரை நான்கு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் பகுதிகளை உள்ளடக்கிய பகாங்கில் தொடர்ந்து மழை பெய்யும் என்று மெட்மலேசியா இன்று ஓர் அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது.

மேலும், ஜொகூரில், குளுவாங், மெர்சிங், பொண்தியான், கூலாய், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு ஆகிய இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது. 

மேற்கு கடற்கரை பகுதிகள் (ரானாவ் மற்றும் கோத்தா பெலுட்), சண்டகன் (தெலுபிட், கினாபடங்கன், பெலுரான் மற்றும் சண்டகன்) மற்றும் குடாட் ஆகியவற்றை உள்ளடக்கிய சபாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது. 

சரவாக்கைப் பொறுத்தவரை, நாளை வரை கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமன், பெடோங், சரிகேய், சிபு, முகா, கபிட் (பாடல் மற்றும் கபிட்) மற்றும் பிந்துலு ஆகியவை சம்பந்தப்பட்ட பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மெட்மலேசியா இன்று ஓர் அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles