வரும் ஞாயிற்றுக்கிழமை தேசிய அளவிலான மணிமன்ற நாள் விழா!டத்தோ டி. மோகன் தொடக்கி வைக்கிறார்

கோலாலம்பூர் மார்ச் 22-
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் ஏற்பாட்டில் “தேசிய அளவிலான மணிமன்ற நாள் விழா மார்ச் 23, 2025 அன்று Star Banquet Hall KL, Wisma KKP ஜாலான் ஈப்போ, கோலாலம்பூரில் மிகச் சிறப்பாக நடைப்பெறவுள்ளது.

இந்நிகழ்வை மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி. மோகன் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து திறப்புரை ஆற்றுவார்.

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் திரு. முருகன் மணியம், மேனாள் தலைவர்களையும் இன்னாள் பொறுப்பாளர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அழைக்கிறார்.

மலேசியத் திருநாட்டில் ஆலமரம் போல வேரூன்றி, கடந்த 69 ஆண்டுகாலமாக இந்நாட்டில் பீடுநடைப் போட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர் மணிமன்றம் தொடர்ந்து வாழையடி வாழையாக இந்நாட்டில் வீறுகொண்டும் விவேகத்துடனும் செயல்பட்டு வருகின்றது.

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் வளர்ச்சிக்காக மகத்தான பங்காற்றிய மேனாள் தலைவர்கள், மேலவை உறுப்பினர்களின் சேவையை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவது நோக்கமாகும்.

மேலும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக மணிமன்றத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மேனாள் தலைவர்களுக்கும் இன்னாள் தலைவர்களுக்கும் “மணிப்பட்டம்” என்ற விருது வழங்கப்படவுள்ளது.

அனைத்து மேனாள் தலைவர்களும் இளைஞர் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles