


கோலாலம்பூர் மார்ச் 22-
இப்போது உலகம் டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவு துறையில் அதிவேகம் முன்னேறிச் செல்கிறது.
இதில் இந்திய சமுதாயம் பின் தங்கிய விடக்கூடாது என்பதற்காக Microsoft மற்றும் Pepper labs நிறுவனத்தின் ஆதரவோடு மித்ரா டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவு பட்டறையை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில்
இந்திய சமுதாயம் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னேற வேண்டும் என்பதில் மித்ரா உறுதியாக இருக்கிறது.
உலகமே இன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் துறையில் சுழன்று கொண்டிருக்கிறது.
மலேசியாவிலும் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மின்னல் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
Microsoft மற்றும் Pepper labs நிறுவனம் சுமார் எட்டு லட்சம் மலேசியர்களை இந்த துறையில் கவர்ந்து இருக்கிறது.
இந்தியர்களுக்காக இந்த இரு நிறுவனங்களும் உதவ முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று மித்ரா தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.
மலேசிய பங்கு சந்தை மண்டபத்தில் இன்று மிகப்பெரிய அளவில் நடைபெற்ற டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறையை பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
Microsoft நிறுவனத்தின் பிரநிதிதி கணேஷ் குமார் மற்றும் pepper labs நிறுவனத்தின் பிரதிநிதி குகன் பதி , குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

