

கோலாலம்பூர் மார்ச் 22-
இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மித்ரா நிதி சரியான முறையில் சென்றடைவதை உறுதி செய்து வருகிறேன் என்று மித்ரா தலைவர் மாண்புமிகு பிரபாகரன் தெரிவித்தார்.
மித்ரா என்பது சமூக நல இயக்கம் அல்ல. இது இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்டது.
இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு 100 மில்லியன் ரிங்கிட் மித்ரா நிதி மிகவும் குறைவு
அதனால் மித்ராவுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கி தரும்படி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கேட்டுக் கொண்டுள்ளேன்.
இந்த ஆண்டில் மட்டும் மித்ரா வுக்கு 5,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
இந்த விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
மலேசிய பங்கு சந்தை மண்டபத்தில் Microsoft மற்றும் Pepper labs நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்திய சமுதாயத்திற்கான டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

