
கோலாலம்பூர் மார்ச் 22-
மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவில் விவகாரம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 8 மாதங்களாக ஆலய நிர்வாகத்துடன் இந்த விவகாரம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறேன்.
ஆனால் நான் ஒருபோதும் சந்திக்கவில்லை என்று சொல்வது தவறாகும்.
வீரா பத்ரகாளியம்மன் கோவில் பிரச்சனைக்கு ஒரு தெளிவான விடைக் கிடைக்கும் என நான் பெரிதும் எதிர்ப்பார்க்கும் தருவாயில், மக்கள் பொறுமை காக்க கேட்டுக் கொள்கின்றேன்..
கோவில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எந்த தரப்புக்கும் பாதகம் இல்லாமல் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
டிக் டாக்கில் இந்த கோவில் பிரச்சினை குறித்து தவறான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதை பொதுமக்கள் நம்பக்கூடாது. விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்ப்போம் என்று அவர் சொன்னார்.

