

கோலாலம்பூர் மார்ச் 23-
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவில் சட்டவிரோதமான கோவில் அல்ல.
இது சட்டபூர்வ கோவில். சட்டவிரோத கோவில் என்று கூறுவதை நிறுத்தி கொள்ளுங்கள் .
2008 ஆம் ஆண்டில் இடமாற்றம் செய்யும் போது தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவில் கட்டுவதற்கு நிலத்தை வழங்கியது கோலாலம்பூர் மாநகர் மன்றம்.
இது சட்டவிரோத கோவில் என்றால் எப்படி மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் வழங்கப்பட்டது என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
இதனிடையே,
தலைநகர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவிலை ம இகா காப்பாற்றவில்லை என்று கூறப்படுவது சுத்த பொய் என்றும் டத்தோஸ்ரீ எம் சரவணன் சொன்னார்.
2006 ஆம் ஆண்டில் சாலை விரிவாக்கத்திற்கு வழிவிடும் வகையில் இந்த கோவில் இடமாற்றம் செய்யும் படி கோலாலம்பூர் மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டது.
இப்போது இருக்கும் இடத்தில் பின்புறத்தில் இந்த கோவில் பல ஆண்டுகளாக இருக்கிறது.
பின்னர் 2008 ஆம் ஆண்டில் இந்த கோவில் இப்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது.
அப்போது நான் கூட்டரசு பிரதேச துணை அமைச்சராக இருந்தேன்.
தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவில் இருக்கும் நிலம் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு சொந்தமாகும்.
2014 ஆம் ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கோவில் நிலத்தை தனியார் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
ம இகா ஆட்சியில் இருந்தபோதுதான் இந்த கோவில் காப்பாற்றப்பட்டது என்று அவர் சொன்னார்.

