

கோலாலம்பூர் மார்ச் 23-
சுமார் 134 ஆண்டுகள் பழமை வாய்ந்த மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவில் இதே இடத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
இந்த கோவிலை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவில் அருகில் மஸ்ஜிட் காட்டுவதாக இருந்தால் கட்டி கொள்ளட்டும்.
ஆனால் எந்த காரணமும் இன்றி தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவிலை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று காலையில் தேவிஸ்ரீ வீரா பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வருகை புரிந்த டாக்டர் இராமசாமி கோவில் நிர்வாகத்தை சந்தித்து பேசினார்.
உரிமை கட்சியின் சார்பில் தமிழச்சி காமாட்சி, சதீஷ் முனியாண்டி மற்றும் டேவிட் மார்ஷல் உட்பட பல பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

