போக்குவரத்து நெரிசல் கட்டணங்களை அமல்படுத்த அரசாங்கம் முன்மொழியவில்லை: அந்தோனி லோக்

கோலாலம்பூரில் தனியார் வாகனங்களுக்கு சாலை நெரிசல் கட்டணங்களை விதிக்க அரசாங்கம் இப்போதைக்கு திட்டமிடவில்லை.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை தெரிவித்தார்.

சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் குறித்த அமைச்சரவைக் குழுக் கூட்டம் இந்த விஷயத்தை ஆழமாக விவாதிக்கப்பட்டது.

மேலும்  பொதுப் போக்குவரத்தின் தரத்தை முதலில் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அமைச்சின் கருத்தையும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, போக்குவரத்து அமைச்சு இந்த நேரத்தில் தனியார் வாகனங்களுக்கு நெரிசல் கட்டணங்களை அமல்படுத்தத் திட்டமிடவில்லை.

மேலவையில் கேள்வி, பதில் அமர்வின் போது அந்தோனி லோக் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles