விடுதலை சிறுத்தை – முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு வழங்கியது! விஜய்க்கு 120 பேர் ஆதரவு

சென்னை மே 9-
நான்கு நாட்கள் இழுபறிக்கு பிறகு தவெக தமிழக்தில் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு அளித்து உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து தவெக ஆட்சியமைக்க தேவையான ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜுனா வாங்கி இருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளித்து உள்ளதன் மூலம் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை விஜய்யின் தவெக கட்சி பெற்றுள்ளது.

மேலும் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளது

விசிக மற்றும் முஸ்லிம் லீக் ஆதரவளித்து உள்ளதன் மூலம் தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் என்று தெரிகிறது.

முன்னதாக நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருந்த நிலையில் தற்போது, விசிக-வும் முஸ்லிம் லீக் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதரவு கடிதம் வழங்கி உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles