
சென்னை: மே 9-
4ஆவது முறையாக ஆளுநரை சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்த நிலையில் திங்கட்கிழமை விஜய் முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெசு 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றி பெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
இதனால், சட்டசபையில் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும்
ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் என்ற சூழ்நிலை.யில் தவெகவுக்கு 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
ஆனாலும், பெரும்பான்மைக்கு இன்னும் இடங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டு(2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது.
இதன் மூலம் தவெகவுக்கு 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் விஜய் தலைமையிலான அரசு அமைய உள்ளது.

