மாணவர்கள் பள்ளி சீருடையில் ஜாலூர் கெமிலாங் சின்னம்  அணிய வேண்டும்: அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது 

அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளி சீருடைகளில் ஜாலூர் கெமிலாங் கொடியின் சின்னத்தை அணிய வேண்டும். 

இந்த நடைமுறை அடுத்த மாதம் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கல்வித்துறையின் தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் கூறினார் 

ஜாலூர் கெமிலாங் கொடி கொண்ட சின்னத்தை மாணவர்கள் தங்களின் பள்ளி சீருடையின் வலதுப்புறத்தில் அணிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார் 

அனைத்து அரசாங்க பள்ளிகள், அரசாங்க உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்விக் கூடங்களில் இந்த நடைமுறை செயலாக்கம் காணவுள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் 

ஜாலூர் கெமிலாங் கொடி சின்னத்தை மாணவர்களின் அணிவதன் மூலம் நாட்டை நேசிக்கவும் சமூக நல்லிணக்கத்தை மேலோங்க செய்யவும் இது வழிவகுக்கும் என்று அமைச்சு எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார் 

பள்ளி மாணவர்களிடையே நாட்டுப்பற்றை விதைப்பதில் கல்வியமைச்சு முனைப்பு காட்டி வருவதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்று அஸ்மான் விளக்கம் அளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles