விமான இயந்திரத்தில் தீ: ஏர் ஆசியா விமானம் கே.எல்.ஐ.ஏ 2  விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் !

கோலாலம்பூரிலிருந்து சென்ஷான் நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் ஆசியா விமானம் மீண்டும் கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது 

அந்த A320-216 ரக போயிங் விமானத்தில் இயந்திர தீ ஏற்பட்டது  கண்டறியப்பட்டதாகவும் இதன் காரணமாக கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்பு நடவடிக்கை பிரிவின் துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார் 

நேற்றிரவு 10.37 மணிக்கு தங்கள் தரப்பு அவசர அழைப்பு கிடைத்ததாகவும் இதனால் 9 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார் 

PNUEMATIC DUCTING எனும் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக விமான இயந்திரத்தில் கோளாறு தீ ஏற்பட்டது. நல்வாய்ப்பாக தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார் 

விமானத்தில் இருந்த 171 பயணிகளும் விமான பணியாளர்களும் பத்திரமாக உள்ளனர் என்றும் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்று முக்லிஸ் உறுதிப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles