
கோலாலம்பூர் மார்ச் 30-
இன்று உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு வம்சாவளியினர் உகாதி திருநாளை மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த தருணத்தில் மலேசியாவில் உள்ள அனைத்து தெலுங்கு சமூக உறவுகளுக்கும் உகாதி திருநாள் நல்வாழ்த்துக்களை மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்துக் கொண்டார்.
இந்த புது வருடம் அனைவருக்கும் செழிப்பு , அமைதி, வளர்ச்சி, சந்தோசம், ஆரோக்கியம் மற்றும் வளமான வாழ்வை கொண்டு வர பிரார்த்திக்கிறோம்.
தெலுங்கு மொழி கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூகத்தை பாதுகாத்து அதன் வளர்ச்சிக்காக உழைத்து அர்ப்பணித்த அனைத்து தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசிய தெலுங்கு சங்கத்தின் கிளை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறுப்பினர்களின் தன்னலமற்ற சேவையை நான் மனதார பாராட்டுகிறேன்.
அதே நேரத்தில் மலேசியாவில் உள்ள சிறுபான்மையின் இந்திய சமூகத்தினரை பாதுகாக்கவும் பல்வேறு இனங்களின் ஒற்றுமையை மேம்படுத்தவும் தொடர்ந்து முயற்சி செய்கிற மலேசிய அரசாங்கம் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.