சுங்கை பூலோ வட்டாரத்தைச் சேர்ந்த நான்கு தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 45 மாணவர்களுக்கு மடி கணினிகள்!

காளிதாஸ் சுப்ரமணியம்

சுங்கை பூலோ மார்ச் 30-
இன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம்- டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் வேளையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பின் தங்கிவிட கூடாது என்பதற்காக 45 மாணவர்களுக்கு சு.மோஹனராஜ்,  பா.லஷ்மணன், ம.குமரகுரு, ம.சியாமலா தேவி ஆகியோர் இணைந்து மடிக்கணினிகளை அன்பளிப்பு செய்து பேருதவியை வழங்கி சாதனை படைத்திருக்கிறார் கள்.

உலகிற்கு ஒளி தரும் அறிவைப் பரப்பும் பணியில் தன்னார்வத்துடன்  இணைந்து, மாணவர்களின் கல்விக்கு ஆதரவாக இருக்கும் நோக்கத்துடன்  மடிக்கணினிகளை வழங்கியிருப்பதாக நால்வரில் ஒருவரும் சுங்கைபூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின்  பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னால் தலைவருமான   குமரகுரு கூறினார்.

புக்கிட் ரோத்தான் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்.

சுங்கை பூலோ  சுற்று வட்டாரத்தில்  உள்ள தமிழ்ப்பள்ளியில் பயிலும் 45 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அவர்களின் கல்வி மட்டுமின்றி தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டு வாழ்வில் சிறந்து விளங்குவதற்கு ஒரு தூண்டுகோளாக இம்மடிக்கணினிகள் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது, அவர்களது எதிர்காலத்திற்கு உறுதுணையாகும் மட்டுமல்லாமல், ஒரு முழு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வழியாகவும் விளங்கும் என்று அவர் சொன்னார்.

மாணவர்களுக்கு இந்த பேருதவியை வழங்குவதற்கு துணையாக இருந்த மோஹனராஜ், சியாமலா தேவி, லஷ்மணன் மூவருக்கும் குமரகுரு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுக்கான அடுத்தடுத்த உதவிகளை வழங்குதற்கு இம்மூவர்களின் துணையுடன் சிறப்புடன்  செயல்பட முடியும் என்றும் குமரகுரு நம்பிக்கை தெரிவித்தார்.

குவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்.

“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்து.” (குறள்: 397)

உலகத்தின் முன்னேற்றத்தைக் கவனித்து, கல்வியின் சிறப்பை உணர்ந்தவர்கள், பிறருக்கும் அதே அறிவுப் பயனை வழங்க வேண்டும்.

இக்குறளைப் போலவே இந்த மூவரின் செயல் ஒரு அரிய செயலாகும்.

சுங்கை பூலோ சரஸ்வதி    தமிழ்ப்பள்ளி மாணவர்கள்.

தங்களின் தாராள மனம் மேலும் பலருக்கு உதவிக்கரம் நீட்ட வைக்க வேண்டும் என்று மடிக்கணினிகள் பெற்றுக் கொண்ட மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டுக் கொண்டனர்.

இதுபோன்ற உதவியைப் பெறும் ஒவ்வொரு மாணவரின் எதிர்கால வெற்றி, தங்கள் கருணையின் பிரதிபலிப்பாக இருக்கும் என்று அவர்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டனர்.

மடிக்கணினி பெற்ற பள்ளிகள்

1. குவாங் தமிழ்ப்பள்ளி

2. ⁠புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளி

3. ⁠புக்கிட் ரோத்தான் தமிழ்ப்பள்ளி

4. ⁠சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளி

சு.மோஹனராஜ்,  பா.லஷ்மணன், ம.குமரகுரு, ம.சியாமலா தேவி  ஆகிய நால்வரின்  அரிய செயலுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களின்  இதயங் கனிந்த பாராட்டுகளையும் நன்றியையும்  தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles